புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் அம்மன் நகரில், மகேந்திரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இன்று (செப்.11) அங்கு கட்டடத் தொழிலாளர்கள் வழக்கம்போல வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மூன்றாவது மாடியில் தளம் ஒட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த செல்வகுமார், நவீன்குமார் ஆகிய இருவரும் கலவையைக் கலந்து, மேல் தளத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் கலவையை எடுத்துச் செல்ல பயன்படுத்திய இயந்திரம், அங்கிருந்த மின்கம்பியில் உரசியது. இதனால் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.