தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்பன் புயல்: மரம் விழுந்து இருவர் காயம் - புதுச்சேரியில் மரம் விழுந்து இருவர் காயம்

புதுச்சேரி: ஆம்பன் புயல் உருவானதையடுத்து இரண்டு நாள்களாக வீசிய பலத்த காற்றில் மரக்கிளைகள் விழுந்ததில் இருவர் காயமுற்றனர்.

Two injured as tree falls in puducherry
Two injured as tree falls in puducherry

By

Published : May 20, 2020, 11:24 AM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களாகப் புதுச்சேரியில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் சில இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்த காவலர்கள் விபத்திற்குள்ளானவர்களை மீட்டு ஆட்டோ, அவசர ஊர்திகளில் ஏற்றி அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில், மரக்கிளை முறிந்து விழுந்து காயமுற்றவரில் ஒருவர் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில் என்றும் அவர் மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருவதும் தெரியவந்துள்ளது.

மற்றொருவர் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலி என்றும், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர் மீது மரக்கிளை விழுந்ததில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது காயமுற்ற இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: இன்று கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்; ஒடிசாவில் 102 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று

ABOUT THE AUTHOR

...view details