தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நாட்டில் இருவகை மக்கள், ஒருபுறம் யோகா, மறுபுறம் வாழ்க்கை போராட்டம்' - கபில் சிபல்

டெல்லி: நாட்டில் இரு வகை மக்கள் உள்ளனர். ஒரு தரப்பு மக்கள் ராமாயாணம் பார்த்துக் கொண்டு வீட்டில் யோகா செய்கின்றனர். மறு தரப்பு மக்களோ நடந்துகொண்டே வீடு செல்ல முயற்சிக்கின்றனர் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

'நாட்டில் இருவகை மக்கள், ஒருபுறம் யோகா, மறுபுறம் வாழ்க்கை போராட்டம்'- கபில் சிபல்  Senior Congress leader Kapil Sibal on Wednesday took a dig at the governmen  Ramayan and playing antakshari  ஒருபுறம் யோகா, மறுபுறம் வாழ்க்கை போராட்டம்  கபில் சிபல்  kapil sibal
'நாட்டில் இருவகை மக்கள், ஒருபுறம் யோகா, மறுபுறம் வாழ்க்கை போராட்டம்'- கபில் சிபல் Senior Congress leader Kapil Sibal on Wednesday took a dig at the governmen Ramayan and playing antakshari ஒருபுறம் யோகா, மறுபுறம் வாழ்க்கை போராட்டம் கபில் சிபல் kapil sibal

By

Published : Apr 1, 2020, 11:39 PM IST

காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு இந்தியர்கள் உள்ளனர். ஒருபுறம் ராமாயாணம் பார்த்துக் கொண்டு பாட்டு பாடிக்கொண்டும், யோகா செய்து கொண்டும் உள்ளனர்.

மற்றொரு புறம் மக்கள் தனது வீட்டை அடைய முயற்சி செய்கின்றனர். அவர்கள் உயிர் வாழ போராடுகிறார்கள். அவர்களிடம் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் ஆதரவு என எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

கரோனா தொற்று பரவிவரும் நிலையில், நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாள்களை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மக்கள் யோகா செய்யலாம் என்ற யோசனையுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை விமர்சித்து கபில் சிபல் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவிலும் 200 பேர் தனிமைப்படுத்தல் - ஸ்ரீராமலு

ABOUT THE AUTHOR

...view details