மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வாரி லால் என்பவரும், ஹைதராபத்தைச் சேர்ந்த பிரஷாந்த் வைண்டம் என்பவரும் கடந்த 14ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் இருவரையும் சோதனை செய்த பாகிஸ்தான் காவல் துறையினர் விசா உள்ளிட்ட ஆவணங்களின்றி, தங்களது எல்லைக்குள் இரு இந்தியர்களும் நுழைந்ததை உறுதிபடுத்தினர்.
பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்த இரு இந்தியர்கள் கைது! - Two Indians arrested in Pakistan
டெல்லி: எந்த ஆவணங்களுமின்றி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Two Indians arrested in Pakistan
பின்னர், பாகிஸ்தான் சட்டப்பிரிவு 334(4)இன் படி அனுமதியின்றி எல்லைக்குள் நுழைந்த இருவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்து கைது செய்தனர். இதுவரை இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை வாய் திறக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: 'குல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனைக்கு தடை'