இந்திய கடலோர காவல் படைக்கு (ஐ.சி.ஜி.எஸ்) 'அன்னி பெசன்ட்' மற்றும் (ஐ.சி.ஜி.எஸ்) 'அம்ரித் கவுர்' என்ற இரண்டு அதிவேக ரோந்துக் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலர் அஜய் குமார், இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இந்த இரண்டு அதிவேக ரோந்து கப்பல்கள் நாட்டின் கிழக்கு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
கொல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற கார்டன் ரீசர்ச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த இரு ரோந்து கப்பல்களையும் தயாரித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலர் அஜய் குமார், இந்திய கடலோர காவல்படை இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன், கார்டன் ரீசர்ச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி.கே.சக்சேனா ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்ச!