தெலங்கானா மாநிலம் மிர்சவுக் பகுதியில் இளைஞர் ஒருவர் ரமலான் நோன்பு, இப்தார் விருந்துக்காக பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மிர்சவுக் காவல் நிலைய காவலர் சுதாகர் தாக்கியுள்ளார். காவலர் சுதாகர் தாக்கியதில் அந்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில் கோல்கொண்டா ஷேக்பேட் பகுதியில் ஊர்க்காவல் படை வீரர் ஹனுமந்த் என்பவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பிருப்பதாகவும் மஜ்லிஜ் பச்சோ தெஹ்ரிக் அமைப்பின் தலைவர் அம்ஜத்துல்லாஹ் கான் காலித் குற்றஞ்சாட்டினார்.