இதுகுறித்து, குழந்தையின் தாய் கூறுகையில், " குழந்தை குடும்பத்தினருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் இருந்து விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தை நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சையில் திருப்தி அடையவில்லை. மேல் சிகிச்சைக்காக குழந்தையை எய்ம்ஸுக்கு மாற்ற ஜூலை 23ஆம் தேதி முடிவு செய்தோம்.
நாங்கள் காலை 8 மணியளவில் எய்ம்ஸ் வந்தடைந்தோம், ஆனால் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க போராடினோம். ஆரம்பத்தில், மேல் சிகிச்சைக்காக சி.டி-ஸ்கேன் செய்யுமாறு மருத்துவமனை கேட்டுக்கொண்டதன்படி எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற சோதனைகளுடன் சி.டி-ஸ்கேன் நடத்தப்பட்டது.
இதையடுத்து, குழந்தைக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், படுக்கைகள் கிடைக்காததால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறினர்.