துபாயிலிருந்து கேரள மாநிலம் கன்னூர் வந்த விமானத்தில், 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை இருவர் கடத்தி வந்ததை விமானப் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர். 45,51,000 ரூபாய் மதிப்பிலான தங்கம் குடைகள், பந்து, பேனாக்கள், தள்ளு வண்டிகள் மற்றும் ஜீன்ஸ் பொத்தான்களில் மறைத்து வைத்து எடுத்துவரப்பட்டது சோதனையில் தெரிய வந்தது.
கன்னூரில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - கன்னூர் விமான நிலையத்தில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தல்
திருவனந்தபுரம் : கன்னூர் விமான நிலையத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய இருவரை சுங்கத் துறை அலுவலர்கள் கைது செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
two-held-gold-worth-rs-45-lakhs-seized-by-air-intelligence-unit-in-kerala
இந்த தங்கத்தை கொச்சி சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக ஜூலை 14ஆம் தேதி, ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்த பயணிகளிடமிருந்து 578 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.