புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் இரு காதல் ஜோடிகள் கடந்த புதன்கிழமை தங்கியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் வந்த பெரியக்கடை காவலர் சத்தீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் அத்துமீறி மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி அடிப்படையில் பெரியக்கடை காவலர் சத்தீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையை அடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், துறை ரீதியான விசாரணை நடந்துவந்தது. இவ்வேளையில் இன்று பெரிய கடை காவல் நிலையத்தில் ஆளுநர் கிரண்பேடி திடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இவ்வழக்கு குறித்து விரைவில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
காவலர்கள் பணிநீக்கம் குறித்த செய்தி குறிப்பு அதனைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடந்துவந்த சூழலில், இன்று பெரியக்கடை காவலர் சத்தீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் பணிநீக்கம் செய்பட்டதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.