ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய ராணுவ வீரர் மற்றும் இரண்டு பெண்களை தடுத்து நிறுத்திய சுற்றுலா காவல் துறையினர், மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்நபர் பிகார் படைப்பிரிவின் சிப்பாய் ரோஷன் குமார் என்பதும் அவருடன் இருந்த இரண்டு பெண்களும் தீத்வால் குப்வாராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த ராணுவ வீரரும் தீத்வால் பகுதியில்தான் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இவர்கள் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.