ஃபோனி புயல் எதிரொலியாக ஒடிசா, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த சில நாட்களாக முன் அறிவித்தது. இதனால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஃபோனி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இணைப்பு பெட்டி இணைக்கும் பணி தாமதம் அடைவதால் நாளை (07-05-19) இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.