மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் பதஸி என்னும் வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள், சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக ரயில் தண்டவாளமும் செல்கிறது. இந்த தண்டவாளத்தை இன்று (டிச 11) காலை யானைக் கூட்டம் ஒன்று கடந்தது. அப்போது அந்த வழியே வந்த ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.