பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராணா. இந்தியாவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான அவர் சீட்டா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இன்று பஞ்சாப் காவல் துறையினரால் சிர்சா மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பஞ்சாப் காவல் துறைத் தலைமை இயக்குநர் தின்கர் குப்தா கூறுகையில், "ரஞ்சீத் ராணா சீட்டா, கடந்த ஜூன் மாதம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரியிலிருந்து 532 கிலோ போதைப்பொருள்களை கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
ரஞ்சித் ராணாவுடன், அவரது சகோதரரான சுகன்தீப் போலாவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள் இருவரும் இணைந்து, 2018-19ஆம் ஆண்டுகளில் உப்பு மூட்டைகளுக்கு நடுவே, போதைப்பொருள்களை மறைத்து கடத்திவந்ததையும் நினைவுகூர்ந்து குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் ஹிஸ்புல் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களான இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தானிற்கும் பஞ்சாப்பிற்கும் பொதுவான எல்லைகள் இருப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: போதை அடிமைகளை மீட்டெடுக்க களம்காணும் சமூக வலைதள ஜாம்பவான்கள்!