தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைக்காக நெயில் பாலிஷ் ரிமூவர் லோஷன் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு! - நெயில் பாலிஷ் ரிமூவர்

போபால்: மதுபானம் கிடைக்காத விரக்தியில் போதைக்காக நெயில் பாலிஷ் ரிமூவர், ஆஃப்டர் ஷேவ் லோஷன், சானிடைசர்களை கலந்து குடித்த இருவர் உயிரிழந்தனர்.

்ே்
்ேே

By

Published : May 5, 2020, 2:20 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் பக்கர்வா கிராமத்தைச் சேர்ந்த மங்கத் ராம் சர்மா (60), கிருஷ்ணா பால் (40) ஆகிய இருவரும், மதுபானம் கிடைக்காத விரக்தியில் இருந்துள்ளனர். போதைக்காக ஆல்கஹால் தன்மைக்கொண்ட நெயில் பாலிஷ் ரிமூவர் (nail polish remover) , ஆஃப்டர் ஷேவ் லோஷன் (aftershave lotion), சானிடைசர் கலந்த பானத்தை குடித்துள்ளனர்.

அப்போது,திடீரென்று இருவருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:பட்டாக் கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details