மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதி முகுந்த்பூர் வனவிலங்கியல் பூங்காவில் கடந்த வியாழக்கிழமை ஜாஸ்மின் எனப் பெயர் கொண்ட பெண் சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சோகத்துடன் காட்சியளித்தது. பிறந்தது முதல் பால் குடிக்கவில்லை. இதையடுத்து அந்தக் குட்டியை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்தக்குட்டி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. முகுந்த்பூர் பூங்காவில் ஆறு புலிகள் மற்றும் அதன் சந்ததிகள் வசிக்கின்றன.
ஜாஸ்மின் கடந்த ஆண்டு சத்தீஷ்கர் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டது. இங்கு கடந்த 1951ஆம் ஆண்டு அரிய வகை வெள்ளைப்புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. அந்நிகழ்வு அப்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.