ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டத்தில், மது போதையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவர்களது நண்பர்களாலேயே கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுக்கிடையே நடைபெற்ற மது விருந்து நடைபெற்றதில், மது போதையில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துமாறு முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்!