ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், கிரிரீ பகுதியில் உள்ள நகா எனும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுதம் எந்திய பிரிவினைவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த இருவரும், ஒரு சிறப்பு காவல் அலுவலரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்த மூன்று வீரர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பேரும் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதற்கிடையே, புல்வாமா மாவட்டம் துஜன் கிராமத்தில் உள்ள பாலத்தின் அடியே பிரிவினைவாதிகள் தாக்குதல் நடக்கும் நோக்கில் பயங்கர வெடி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். ஆனால், பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.