உத்தரப் பிரதேச மாநிலம் போபா பகுதியில் உள்ள சுக்ரதா கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் ஷகூன் (45). இவருக்கு திருமணமாகி சாஜிதா என்ற மனைவியும், நசீம் (13) ஷிஷான் (11) என்ற குழந்தைகளும் உள்ளனர். கங்கை நதிக்கு அருகே விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் ஷகூன், விவசாய பயிர்களுக்கு காவல் இருப்பதற்காக தற்காலிக இருப்பிடம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் குடும்பத்தினர் அனைவரும் தங்கி வந்துள்ளனர்.
மின்னல் தாக்கியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு; பெற்றோருக்கு சிகிச்சை - Uttar Pradesh News
முசாஃபர்நகர்: போபோ அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
two-children-killed-parents-injured-in-lightning-strike
வழக்கம்போல் நேற்று காவலில் இருந்தபோது, கனமழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக மின்னல் தாக்கியதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் பெற்றோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆந்திராவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு!