கொல்கத்தா புர்ரா பஜார் பகுதியில் இந்த கொடூர சம்பவ அரங்கேறியுள்ளது. குழந்தைகளின் தந்தைக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ஷிவ் குமார் குப்தாவிற்கும் (55) கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் வீட்டுக்கும் பொதுவான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை மற்றும் 2 வயது குழந்தை ஆகிய இருவரையும் ஷிவ் குமார் மாடியிலிருந்து தூக்கி வீசியதாக் கூறப்படுகிறது.
ஏன் இங்க விளையாடுறீங்க... 2 குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய அண்டை வீட்டுக்காரர் கைது! - மாடியிலிருந்து குழந்தைகளை வீசியவர் கைது
கொல்கத்தா: தன்னுடைய வீட்டின் முன்பாக பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடுவதை பொறுக்க முடியாமல் 4ஆவது மாடியிலிருந்து குழந்தைகளை தூக்கி வீசியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
குழந்தை
இது குறித்து காவல் துறையினர், “ பலத்தக் காயங்களுடன் 6 வயது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஷிவ் குமார் குப்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மசாலா மோரை அறிமுகப்படுத்திய கோக் நிறுவனம்!