தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்சல் தாக்குதல் - இரு சத்தீஸ்கர் ஆயுதப் படையினர் உயிரிழப்பு! - நக்சல் தற்போதைய செய்தி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் இரு சத்தீஸ்கர் ஆயுதப் படையினர் உயிரிழந்தனர்.

Naxal
Naxal

By

Published : Mar 14, 2020, 8:34 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்திலுள்ள மர்தூம் காவல் நிலையம் அருகே நடந்துவரும் சாலை அமைக்கும் பணிகளுக்கு அம்மாநில ஆயுதப் படை (சிஏஎஃப்) சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

இன்று மாலை சிஏஎஃப் வீரர்கள் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சல்கள் நடத்திய திடீர் தாக்குதலில் இரண்டு சிஏஎஃப் தலைமைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல, மர்தூம் அருகேவுள்ள மற்றொரு இடத்தில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பில் ஒரு சிஏஎஃப் வீரருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: திருமண நிகழ்விற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம் - 5 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details