தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி! - வாகன ஓட்டி

கடாக்: வெள்ளத்தில் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளம்

By

Published : Aug 13, 2019, 12:11 PM IST

கர்நாடகா மாநிலத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இரவு, பகல் பாராது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை விட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி!

இந்நிலையில், கடாக் மாவட்டம் கொர்லாஹல்லி கிராமத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. நேற்று, இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது, வெள்ள நீரின் வேகம் அதிகரித்தது. இதில், நிலை தடுமாறிய அவர், நீருடன் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை வெள்ளத்திலிருந்து மீட்டனர்.

இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு, அவர் மீட்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details