மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா சலேகாசா வனச்சரகத்தில் நேற்று (மே 19) எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்த இரண்டு கரடிகளை அப்பகுதி வனத்துறை அலுவலர்கள் மீட்டனர். அதன் கணொலி பதிவை இந்திய வனத்துறை அலுவலர் நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கிணற்றில் விழுந்த கரடிகள்; வைரலாகும் வீடியோ - Salekasa Range in Gondia
மும்பை: கோண்டியா பகுதியில் கிணற்றில் விழுந்த இரண்டு கரடிகளை வனத்துறையினர் மீட்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
![கிணற்றில் விழுந்த கரடிகள்; வைரலாகும் வீடியோ two-bears-rescued-from-wel](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7275824-thumbnail-3x2-l.jpg)
two-bears-rescued-from-wel
அதில், கரோனா மற்றும் ஆம்பனின் வருத்தத்திற்குரிய செய்திகளுக்கிடையில், இதுபோன்ற செய்தி என்னை உற்சாகப்படுத்துகிறது. கரடிகளை மீட்ட அலுவலர்கள், ஊழியர்களுக்கு நன்றிகள் என பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:லாரி ஓட்டுநரை கவ்விப்பிடிக்க முயன்ற சிறுத்தை: காணொலி வைரல்