காஷ்மீரில் ஸ்ரீநகர் ஹெச்எம்டி பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலிருக்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காஷ்மீர் சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் படுகாயம்! - காஷ்மீர் இரண்டு ஜவான்கள் படுகாயம்
காஷ்மீர்: ஸ்ரீநகர் ஹெச்எம்டி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர்
மேலும், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனயில் ஈடுபட்டுவருகின்றனர். காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தத் தாக்குதலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.