தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் சார்பு பதிவு: அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வழக்கு!

அலிகார்: ஈகைத் திருநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் சார்பு குறித்து பதிவிட்டதற்காக இரண்டு அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

AMU students arrested  Pro-Pak post  social media  Aligarh Muslim University  student arrest  Jamia Millia Islamia  அலிகார் பல்கலைக் கழகம்  பாகிஸ்தான் ஆதரவுப் பதிவு  அலிகார் மாணவர்கள் மீது வழக்கு
பேஸ்புக்கில் பாகிஸ்தான் சார்பு பதிவு: இரண்டு அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது வழக்கு

By

Published : May 30, 2020, 10:01 AM IST

ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் சார்பு குறித்து பதிவிட்ட அலிகார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ஏ (மதத்தை அடிப்படையாக வைத்து வெவ்வெறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), பிரிவு 153 பி-ன் (அதன் மூலம் பொது அமைதியை குலைக்கும் விதத்தில் செயல்பட்டது) கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2020 பிரிவு 66டி( கணினி வள மோசடி)யின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலிகார் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஷாஃபி கிட்வாய் இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில், பல்கலைக்கழக விதிமுறைகளின் படி அந்த இரு மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த மாணவர்கள் தங்கள் ஃபேஸ்புக் பதிவில், "ஈத் என்றால் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி என்பது பாகிஸ்தான்" என்று பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில், பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஃபர்ஹான் சுபேரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும், அவர் ஒரு குற்றவாளி என்றும் அவர் மீது 11 வழக்குகள் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details