கடந்த 18ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் ஜியோடேக் பதிவு வரைபடத்தில் லடாக், சீனப் பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து அறிந்த ட்விட்டர் நிறுவனம், சில மணி நேரத்தில் அந்த வரைபடத்தை திருத்தி சரி செய்தது.
இந்நிலையில், தரவு பாதுகாப்பு மசோதா, 2019 தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ட்விட்டரின் பிரதிநிதிகள் ஆஜரானார்கள். அப்போது லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது குறித்து உறுப்பினர்களிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.