தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டைக் காக்க ரஃபேல், ரஃபேலை காக்க எலுமிச்சை - நெட்டிசன்களிடம் சிக்கிய ராஜ்நாத் சிங்! - ராஜ்நாத் சிங் ரபேல் விமானம்

ஹைதராபாத்: ரஃபேல் விமானத்துக்கு பூ, பொட்டு மற்றும் எலுமிச்சை வைத்து வணங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Rajnath singh

By

Published : Oct 10, 2019, 12:13 PM IST

Updated : Oct 10, 2019, 2:43 PM IST

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஃபிரான்ஸ் நாட்டிற்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காகச் சென்றிருந்தார். அன்றைய தினம் விஜயதசமி என்பதால், ரஃபேல் விமானங்களுக்கு பூ, பொட்டு, தேங்காய் மற்றும் எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை வைத்து வழிபட்டார்.

ரஃபேல் விமானத்தில் ராஜ்நாத் சிங்

இதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர தளங்களிலும் ராஜ்நாத் சிங் பேச்சுதான்.

இதுதொடர்பான நெட்டிசன்களின் விமர்சனங்கள் வருமாறு:- நாட்டைக் காக்க இந்திய அரசு ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளது. தற்போது ரஃபேலை காக்க எலுமிச்சை பழங்கள் வாங்கப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் கேள்வி

மற்றொரு நபர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சேர்த்து கலாய்த்து எடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு பட்ஜெட்:
நிர்மலா சீதாராமன்: ரஃபேல் விமானங்கள் ரூ.1600 கோடி. கூடுதலாக ரூ.20
சபாநாயகர்: இருபது ரூபாய் எதற்கு?
நிர்மலா சீதாராமன்: எலுமிச்சை ஊறுகாய்க்கு..!

நெட்டிசன்கள் கேள்வி

அமெரிக்கா: என்னிடம் அணுகுண்டு உள்ளது
லண்டன்: நாங்கள் ஹைட்ரோஜன் குண்டு வைத்துள்ளோம்.
சீனா: எங்களிடம் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளது.
ரஷ்யா: எங்களிடம் ரசாயன ஆயுதங்கள் உள்ளது.
இந்தியா: எங்களிடம் எலுமிச்சை மற்றும் தேங்காய் உள்ளது.

நெட்டிசன்கள் கேள்வி

எங்களிடம் எலுமிச்சை, மிளகாய், தேங்காய் மற்றும் ஓம் தொழில்நுட்பம் உள்ளது என்றும் சிலர் கலாய்த்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ஆற்று நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்த தெர்மாக்கோலை பயன்படுத்தி நாடு முழுக்க பிரபலம் அடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்கலாமே:

'இந்தியா, இந்து கலாசாரங்களை கேலிக்குள்ளாக்குவதே காங்கிரசின் வாடிக்கை'

Last Updated : Oct 10, 2019, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details