தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்விட்டரின் சிஇஓ நேரில் ஆஜராக சம்மன் - ஜேக் டோர்சே

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சேவுக்கு வரும் பிப்ரவரி 25-க்குள் ஆஜராக வேண்டும் என பாராளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜேக் டோர்சே

By

Published : Feb 12, 2019, 1:29 PM IST

'முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத நிறுவனத்தின் பிரதிநிதிகள்' அளிக்கும் விளக்கங்களை கேட்க தங்களுக்கு விருப்பம்மில்லை என தகவல் தொழில்நுட்ப பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது. ட்விட்டர் இடதுசாரி சார்பு தன்மையுடன் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டிவருகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சே, பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காதது பாராளுமன்ற குழுவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேக் டோர்சே

இதுகுறித்து அக்குழுவின் தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ஜேக் டோர்சேயின் இந்த செயலானது பாராளுமன்ற உரிமை மீறல் பிரச்னையாக பார்க்கப்படும். அவர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையான இந்திய நாட்டை மதிக்கவில்லை. நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கூற அவர்கள் விரும்பவில்லை" என்றார்.

கடந்த திங்கள்கிழமை டோர்சே ஆஜராக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி 25ம் தேதிக்குள் ஜேக் டோர்சே ஆஜராக வேண்டும் என பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details