இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எனது ட்விட்டர் பதிவுகள், உச்ச நீதிமன்றத்தையோ அதன் நீதிபதிகளையோ அவமதிப்பதாக கருதப்படக்கூடாது. அவை நீதித்துறை, உயரிய உச்ச நீதிமன்றத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்ற எனது உள்ளக்கிடங்காகவே காணப்பட வேண்டும். இது கருத்துச் சுதந்திரத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதிமன்றம் பலவீனமடைந்தால், அது குடியரசை பலவீனப்படுத்தும் என நம்புகிறவன் நான்.
நீதிமன்றம் பலவீனமடைந்தால், அது குடியரசை பலவீனப்படுத்தும் - பிரசாந்த் பூஷண் - ட்விட்டர் பதிவுகள்
டெல்லி : உயர் நீதிமன்ற முன்னாள் மற்றும் இன்னாள் நீதிபதிகள் குறித்த என் விமர்சனம் அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
![நீதிமன்றம் பலவீனமடைந்தால், அது குடியரசை பலவீனப்படுத்தும் - பிரசாந்த் பூஷண் முரண்படுகிறேன் இருந்தாலும் ஏற்கிறேன் - பிரசாந்த் பூஷண்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:53:13:1598887393-prashant-bhushan-2408newsroom-1598269549-1062.jpg)
முரண்படுகிறேன் இருந்தாலும் ஏற்கிறேன் - பிரசாந்த் பூஷண்
நீதிமன்றம் குற்றமாக கருதும் எனது கருத்தின் மீதான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் உரிமை எனக்கு உண்டு. இருப்பினும், இப்போது அந்த தீர்ப்பை மதித்து ஏற்கிறேன். தீர்ப்பை மதித்து அபராதத்தை செலுத்துவேன்" என கூறியுள்ளார்.