தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி எத்தனாலில் பறக்க இருக்கும் டிவிஎஸ் பைக்!

நியூ டெல்லி: எத்தனாலை கொண்டு இயங்கும் முதல் இரு சக்கர வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய வாகனம்

By

Published : Jul 12, 2019, 11:32 PM IST

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு பசுமையான முறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் நிலையான எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அதன் படி இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான டிவிஎஸ் எத்தனால் மூலம் இயங்கும் புதிய இரு சக்கர வாகனம் ஒன்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் முன்னிலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

எத்தனலால் இயங்கும் புதிய இரு சக்கர வாகனத்திற்கு "TVS Apache RTR 200 4V" எனப் பெயரிட்டுள்ளனர். டிவிஎஸ் நிறுவனத்திற்கு உலகளவில் 3.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கூறுகையில், " இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு நிலையான மாற்று எரிபொருளால் இயங்கும் வாகனங்களை உருவாக்கவே முயல்கின்றன. எத்தனாலால் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க ஆகும் செலவைக் கணக்கில் கொள்ளாமல் சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் என்பதற்க்காகபவே தயாரித்து உள்ளோம்", எனக் கூறினார்.

எத்தனாலின் பயன் என்ன?

எத்தனால் மற்ற எரிபொருள் போல் இல்லாமல் இயற்கையான முறையில் தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. பெட்ரோலுக்கு மாற்றாக விளங்க உள்ள எத்தனால் காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கும் என்பதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இயலும் என நம்பப்படுகின்றது.

TVS Apache RTR 200 4V

எத்தனால் பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சாதாரண பெட்ரோல் இயங்கும்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு அளவு 35 சதவீதம் வரை குறையும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது நைட்ரஜன் ஆக்ஸைடையும் கார்பன் மோனோக்சைடையும் குறைந்த அளவே உமிழும் என்பதால் சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும்.

ஏற்கனவே,150 சிசி என்ஜினால் இயங்கும் இரு சக்கர வாகனங்களைத் தடை செய்ய அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிதி ஆயோக்கின் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு எத்தனாலை கொண்டு இயக்குவதற்கு ஏற்ற எஞ்சினை தயாரிக்க கெடு விதித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details