பஞ்சாப்பில் குர்தாஸ்பூர் (Gurdaspur) மாவட்டத்தில், படாலா பகுதியில் சுற்றித்திரியும் மக்களைக் கண்காணிப்பதற்கு காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, சாலையில் ஒருவருடன் வந்த இரண்டு சிறுவர்களைத் தடுத்து நிறுத்தி, காவல் துறையினர் விசாரித்தனர்.
சிறுவன் உடனடியாக காவலர்களிடம் டியூஷன் சென்று வருவதாகவும், டியூஷன் மாஸ்டரின் வீட்டு முகவரி வரை கூறியுள்ளான். இதைக் கேட்ட துணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குர்தீப் சிங், "வா நீயே வீட்டைக்காட்டு" எனச் சிறுவனை அழைத்துச் சென்றார்.
காவல் துறையினருடன் வீரநடை போட்டு நடந்து சென்ற 5 வயது சிறுவன், மாஸ்டரின் வீட்டின் முன்பு ஸ்டாப் ஆனான். இதுமட்டுமின்றி மாஸ்டரின் வீட்டுக் கதவைத் தட்டி, அவர்களையும் வெளியே வரவழைத்தான்.