ஹைதராபாத்: கரோனா அச்சுறுத்துலுக்குப் பின் தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு "தெலங்கானா தமிழ்ச் சங்கம்" தொடங்கப்பட்டது. இந்தச் சங்கம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஹைதராபாத், தெலங்கானா மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் பங்கேற்றனர்.
தெலங்கானா தமிழ்ச் சங்கம் உறுப்பினர்கள் சந்திப்பில் பங்கேற்ற தமிழ் மக்கள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக எந்தவொரு நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து தெலுங்கானா பகுதியில் வசித்து வரும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இணையவழி தமிழ்க் கல்வி வழங்குவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது, ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்குவது, சொந்தமாக சங்கத்துக்கு இடம் வாங்குதல், தமிழ் மக்களை ஒன்றிணைத்து சுற்றுலா செல்வது உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதம் இறுதியில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
தெலங்கானா தமிழ்ச் சங்கம் உறுப்பினர்கள் சந்திப்பில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் அனைத்தையும் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஏ.கே. போஸ், தர்மசீலன், பொருளாளர் நேரு, துணைப் பொதுச் செயலாளர் ராஜ்குமார், குமாரராஜன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்க 9 நாடுகள் விருப்பம்