ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் அமைந்துள்ள கிழக்கு கடற்கரை ரயில்வேயில் பயணிச்சீட்டு பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர், டெல்லியிலிருந்து புபனேஸ்வர் சென்ற விரைவு ரயிலில் கடைசியாக பணியில் இருந்துள்ளார்.
இந்த ரயிலில் பயணித்த யாரிடமிருந்தேனும் இவருக்கு கரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர் சிகிச்சைக்காக கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கிழக்கு கடற்கரை ரயில்வே நிலைய பகுதியில் கண்டறியப்பட்ட முதல் கரோனா தொற்று பாதிப்பு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.