தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க குழு அமைப்பு

திருமலை திருப்பதி அஞ்சனாத்ரி மலைகளில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆய்வுசெய்து நிரூபிக்க அர்ச்சகர்கள் அடங்கிய குழு ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அமைத்துள்ளது.

TTD priests to prove Lord Hanuman was born in Anjanadri
TTD priests to prove Lord Hanuman was born in Anjanadri

By

Published : Dec 17, 2020, 8:06 AM IST

அமராவதி:அஞ்சனாத்ரி மலைகளில் ஆஞ்சநேயர் பிறந்ததை ஆய்வுசெய்து நிரூபிக்க அர்ச்சகர்கள் அடங்கிய குழு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம்நேற்று (டிச. 16) அமைத்துள்ளது.

இது குறித்து நிர்வார அலுவலர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி கூறுகையில், "வரலாற்று, மத அம்சங்களைக் கருத்தில்கொண்டு ஆஞ்சநேய சுவாமி திருமலையில் பிறந்தார் என ஆய்வுசெய்து நிரூபிக்க அர்ச்சகர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பல கோயில்களின் உள்ளூர் வரலாறு காரணமாக ஆஞ்சநேயர் பிறந்த இடம் வெவ்வேறு இடங்களாக விளம்பரப்படுத்தப்பட்டுவருகிறது.

திருமலை மலைகளில் உள்ள ஆஞ்சனாத்ரி மலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார் எனப் பல அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். நவீன காலத்தில், வெங்கடேஸ்வரர் சுவாமியின் பக்தர்கள் பலரும் அஞ்சனாத்ரி மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ஜவஹர் ரெட்டியுடனான சந்திப்பின்போது அர்ச்சகர்கள் - ஸ்கந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பிரம்மந்த புராணம், பவிஷ்யோத்தர புராணம் ஆகியவற்றிலிருந்து ஸ்லோகங்களைப் பாடினர்.

ஆஞ்சநேயர் பிறப்பிட ஆய்வு விவகாரத்தை அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள அர்ச்சகர்களை ஜவஹர் ரெட்டி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க...திருப்பதி லட்டு டோர் டெலிவரி போலி விளம்பரம்: இணையதளம் மீது வழக்கு பதிவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details