இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 63 சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியானதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது, நீங்கள் சுட்டிக் காட்டியது போல் தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட சொத்துகள் தேவஸ்தானத்தால் நிர்வகிக்க முடியவில்லை என்பதே காரணமாக எடுத்துரைக்கப்பட்டது.
"திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்கும் முடிவை கைவிட வேண்டும்" தேவஸ்தான குழு உறுப்பினர் கோரிக்கை! - திருப்பதி சுப்பா ரெட்டி
அமராவதி: திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்யும் முடிவை கைவிடுமாறு தேவஸ்தான குழு உறுப்பினர் ஒருவர், அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இக்காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட சொத்துகள் பக்தர்கள் உதவியுடன் எளிதாக நிர்வகிக்க முடியும். இச்சொத்துக்கள் அனைத்தும் பக்தர்கள் கடவுளுக்கு அன்புடன் அளித்த பரிசுகள். இச்சொத்துகளுடன் பக்தர்களுக்கு அளப்பறியா உணர்வு ரீதியான தொடர்பிருக்கிறது.
எனவே, இந்தச் சொத்துக்களின் விற்பனையை நிறுத்தவும், அந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்