திருமலை - திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்குப் பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து ஆந்திர மாநில அரசின் தலையீட்டின் பேரில், தேவஸ்தான சொத்துக்களின் விற்பனை விவகாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வழக்கமான ஆலோசனையில் ஈடுபட்டது.
திருமலை - திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல ஆலோசனையின் முடிவில், திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்துக்கள், காணிக்கைகள் விற்கப்படாதென அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் வாரியத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் கோயில் சொத்துக்கள் விற்கப்படாது எனவும்; ஊரடங்கு முடிந்த பின்னர் மத்திய, மாநில அரசு அறிவித்த பின்னரே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக - திமுக எம்பிக்கள் கையெழுத்துடன் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்