வேலை நிறுத்தம்
வடமாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை போன்று, தெலுங்கானாவில் 'பதுக்கம்மா' விழா பிரசித்தம். இவ்விழா ஆந்திராவின் சில பகுதிகளிலும் ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை, தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டிப்பு
இதனை கண்டித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அன்றைய தினம் மாலை ஆறு மணிக்குள் ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் அரசு மீண்டும் வாய்ப்பளிக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், பண்டிகை காலத்தில் தலைவலியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
உயர்மட்ட கூட்டம்
இந்த நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் உயர்மட்ட கூட்டம் இன்று நடந்தது. இதில் போக்குவரத் துறை அமைச்சர் அஜய் குமார், மூத்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது அரசுப் பேருந்துகள் ஓடாததால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள், தனியார் பேருந்துகளின் கட்டண விலையேற்றம் குறித்து பேசப்பட்டது.
சந்திரசேகர் ராவ் அதிரடி