தெலங்கானாவில் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், அதன் தலைவர் அஸ்வதாமா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, 'உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை, மாநில அரசு தரப்பில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆர்டிசி தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும்.
தெலங்கானா அரசு ஆர்டிசி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை? - telangana govt to rtc
தெலங்கானா: அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என அதன் தலைவர் அஸ்வதாமா ரெட்டி பேட்டியளித்துள்ளார்.
![தெலங்கானா அரசு ஆர்டிசி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4765684-thumbnail-3x2-rtc.jpg)
tsrtc employees to initiate dialogue, தெலுங்கானா அரசு ஆர்டிசி தொழிலாளர்கள் பிரச்னை
தற்போது மாநில அரசுடன் தாங்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளோம். ஏனென்றால், உயர்நீதிமன்றம் மாநில அரசுடன் பேசி தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்கவில்லை. இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
இதையும் படிங்க: முதல்வன் பட பாணியில் அசத்திய தெலங்கானா முதலமைச்சர்!
Last Updated : Oct 16, 2019, 12:36 PM IST