தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் - முதலமைச்சருக்கு பதிலடி!

ஹைதராபாத்: போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கைவிடுத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

TSRTC employees rule out calling off strike

By

Published : Nov 4, 2019, 3:05 PM IST

போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் போராட்டம் தற்போது 31ஆவது நாளினை எட்டியுள்ளது.

இதற்கிடையே தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்து 500 போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் ஐந்தாயிரத்து 100 வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கபட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஐந்தாம் தேதி மாலைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், ஊழியர்கள் நிரந்தரமாக வேலைகளை இழக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த பேசிய போராட்டக்குழுவின் செய்தித்தொடர்பாளர் அஸ்வதம ரெட்டி, "போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தன்மானத்தோடு தொடர்ந்து போராடுவோம். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் யாரையும் பணியைவிட்டு நீக்கி நடவடிக்கை எடுக்க முடியாது. கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

மேலும் போராட்டம் பற்றிய வழக்கு விசாரணைக்காக தலைமைச் செயலாளர் ஜோஷி, போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் ஷர்மா, ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் லோகேஷ் குமார் ஆகியோருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த வழக்கு நவ.7ஆம் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டமா?

ABOUT THE AUTHOR

...view details