பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையும் தீமைகள் குறித்து நமக்குத் தெரிந்திருந்தும், அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குக் காரணம், அவை நமது அன்றாட தேவைகளில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. அதன் குறைகளைப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில், அதன் பயன்பாட்டையும் நாம் ஏதோ ஒருவகையில் அங்கீகரிப்பது அதன் பிடியில் சிக்கியிருப்பதற்குக் காரணம். இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உலகெங்கிலும் உள்ள மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிதின் வியாஸ், நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றை விளம்பரப்படுத்த முடிவெடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் பிரஷ்களுக்கு மாற்றாக மரத்தலான பிரஷ்கள் தினமும் காலையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிரஷ்களுக்கு மாற்றாக மரத்தலான பிரஷ்களை பயன்படுத்த அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக செயல்பட்டுவரும் அரசு சாரா அமைப்பின் உதவியை வாஸ் நாடியுள்ளார். தேக்கு மர பட்டைகளிலிருந்து பிரஷ்களை செய்வதில் இந்த பழங்குடியினர்கள் கைதேர்ந்தவர்கள்.
தேக்கு மரப்பட்டைகளால் ஆன இந்த பிரஷ் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது என வாஸ் தெரிவித்துள்ளார். காகிதத்தால் ஆன ஸ்ட்ராக்களை விளம்பரப்படுத்துவதிலும் வாஸ் முனைப்பு காட்டிவருகிறார். இவரின் இந்த முயற்சி எதிர்காலத்தில் பிளாஸ்டிக் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பில் மக்கள் பிரதிநிதியின் மகத்தான செயல்!