தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீரடிக்குள் நுழைவதற்கு திருப்தி தேசாய்க்குத் தடை! - Trupti Desai barred

மகாராஷ்டிரா: சீரடிக்குள் டிசம்பர் 8 முதல் 11 வரை நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு சீரடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Shirdi
Shirdi

By

Published : Dec 9, 2020, 7:48 AM IST

Updated : Dec 9, 2020, 9:14 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் சீரடிக்குள் நுழைவதற்கு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 11 வரை திருப்தி தேசாய்க்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீரடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்தி தேசாய் சீரடிக்கு வருவது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கக்கூடும். உத்தரவை மீறி சீரடிக்குள் நுழைந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 188இன்படி அவர் தண்டிக்கப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, "இந்தியப் பாரம்பரியம் அல்லது நாகரிக உடையை பக்தர்கள் அணிய வேண்டும்" என்று கோரி ஸ்ரீ சாய்பாபா கோயில் சீரடி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளுக்கு தேசாய் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை : விவசாயிகளின் தூதுக்குழுவை சந்திக்கவுள்ள அமித் ஷா!

Last Updated : Dec 9, 2020, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details