தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடிக்காகத்தான் ட்ரம்ப் கலந்துகொண்டார் - பிரகாஷ் ஜவடேகர் - ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்பு

நியூயார்க்: ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடியின் உரையைக் கேட்க, அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash Javadekar

By

Published : Sep 24, 2019, 4:11 PM IST

இதுகுறித்து ஏன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேசுவதைக் கேட்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. சுமூகமான அரசியல் அணுகுமுறையால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது என்பதற்கு 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

2015ல் பல்வேறு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்காவை ட்ரம்ப் விலக்கிக்கொண்டார். இந்த நிலையில் நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் அவர் கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details