தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘இந்தியர்களின் பெருந்தன்மையைக் கண்டு வியந்தோம்’ - ட்ரம்ப் நெகிழ்ச்சி - மோடி ட்ரம்ப்

டெல்லி: இந்திய மக்களின் பெருந்தன்மையையும் இரக்க குணத்தையும் கண்டு வியந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Trump
Trump

By

Published : Feb 25, 2020, 6:41 PM IST

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாட்டு உயர் மட்ட அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்திய மக்களின் பெருந்தன்மை, இரக்க குணம் ஆகியவற்றைக் கண்டு நானும் மெலனியாவும் வியந்தோம். எங்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை எப்போதும் மறக்க மாட்டோம். 300 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அப்பாச்சி, MH-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இருநாட்டு பாதுகாப்புத் துறையின் திறன்களை மேம்படுத்த இது உதவும்.

இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

5 ஜி வயர்லெஸ் குறித்தும் சுதந்திரம், வளர்ச்சி, வளம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் எந்தளவுக்கு பங்காற்றுகிறது என்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசித்தோம். இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்வது நான் பொறுப்பேற்ற பிறகு 60 விழுக்காடு உயர்ந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மக்களின் நட்புறவே அமெரிக்க, இந்திய நாடுகளின் உறவுக்கான அடித்தளம் - மோடி

ABOUT THE AUTHOR

...view details