தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிஆர்எஸ் கட்சியின் நல்லூரி ஸ்ரீநிவாஸ் ராவ் கடத்தல்! மாவோயிஸ்ட் வேட்டை - தெலங்கானா

தெலங்கானா: தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் முக்கிய நிர்வாகியான நல்லூரி ஸ்ரீநிவாஸ் ராவ் வீட்டில் இருந்தபோது, மாவோயிஸ்டுகள் குழுவாக வந்து அவரை கடத்திச் சென்றனர்.

நல்லூரி ஸ்ரீநிவாஸ் ராவ்

By

Published : Jul 9, 2019, 2:14 PM IST

கொதாகுடெம் மாவட்டத்தில், பத்ராச்சலம் பிரிவில் வசித்து வருபவர் நல்லூரி ஸ்ரீநிவாஸ் ராவ். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் முக்கிய பொறுப்பில் அங்கம் வகித்து வரும் இவர், இன்று அதிகாலை மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது இதனை மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘15 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு, இன்று அதிகாலை ஸ்ரீநிவாஸ் ராவ் வீட்டுக்கு வந்துள்ளனர். அதில் மூவர் பயங்கரத் துப்பாக்கிகளும், மற்றவர்கள் கையில் தடிகள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்தவர்கள் ஸ்ரீனிவாச ராவிடம் சில விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்’ எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details