தெலங்கானா மாநிலம் உதயமாவதற்கு காரணமாக இருந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நேற்று 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த தினத்தை எளிமையான முறையில் கொண்டாடும்படி அக்கட்சித் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஆறு வருடங்களில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பல அற்பதங்களை நிகழ்த்தியுள்ளது. குடிநீர், விவசாயம், நீர்ப்பாசனம், தொழிற்சாலை என பலத் துறைகளில் சாதனை படைத்துள்ளோம்.