ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) காலை 6 மணியளவில் 209 கோப்ரா பிரிவு, மாநில காவல்துறையினர் இணைந்து நக்சல் அமைப்புகளை மஜ்கானில் தேடுதல் மற்றும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் இந்திரஜித் மஹ்தா அளித்த பேட்டியில் "மாவட்ட காவல்துறை சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் கோப்ரா 209 பட்டாலியன் பணியாளர்கள் தடைசெய்யப்பட்ட நக்சலைட் அமைப்பான பிஎல்எஃப்ஐ உடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மிகக் கடுமையாக நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சலைட் அமைப்புகள் கொரில்லா தாக்குதல் முறையை பயன்படுத்தி காட்டிற்குள் லாவகமாக மறைந்து சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சென்றபோது, ஒரு தானியங்கி ஏ.கே 47 துப்பாக்கி, செல்போன்கள், செய்தித்தாள், உள்ளிட்ட பிற பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இருதரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இறப்புகள் ஏதும் நிகழவில்லை. மக்களின் பாதுகாப்பையும், அரசுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற அமைப்புகளின் சதியை முறியடிக்க தக்க நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் எட்டு பயங்கரவாதிகள் சுட்டு கொலை!