திரிபுரா மாநிலம், கைலாஷ்கர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்றை வழிமறித்து உள்ளே இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது- 518 கிலோ பறிமுதல் - 518 கிலோ
அகர்தலா:காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து 518 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ganja
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்தபோது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த சுமார் 518 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.