தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிறைவேறுமா முத்தலாக் சட்டம்? - BJP

டெல்லி: மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிட பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Parliament

By

Published : Jul 30, 2019, 4:55 PM IST

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையில் தனிப் பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜகவால், மாநிலங்களவையில் இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. முன்னதாக, இரண்டு முறை மாநிலங்களவையில் இந்த சட்டத் திருத்தம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளபட்ட போதும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் சர்ச்சைக்குரிய முத்தலாக் சட்டத் திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முத்தலாக் சட்டத் திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details