தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'முற்போக்குவாதிகளின் முகத்திரையை கிழித்த முத்தலாக் தடைச் சட்டம்' - congress

டெல்லி: முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதின் மூலம் முற்போக்குவாதிகளின் முகத்திரை கிழிந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Jaitely

By

Published : Aug 1, 2019, 2:25 PM IST

மத்திய பாஜக அரசு நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்ததது.

இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது வலைப்பூ பக்கத்தில், 'தலாக் இல்லாத சமூக பாதுகாப்பு' (Talaq without a social security) என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி அதில் முத்தலாக்கை எதிர்த்தவர்களை விமர்சனம் செய்திருந்தார்.

அதில், "முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு இந்திய இஸ்லாமிய பெண்கள் வரவேற்றுள்ளனர். இச்சட்டத்தை தொடக்கம் முதலே எதிர்த்துவந்த, தங்களை முற்போக்கு சிந்தனைவாதிகளாக சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் இதை கொண்டாடியிருக்க வேண்டும்.

இதன் மூலம் யார் உண்மையான முற்போக்குவாதிகள் என்பது மக்களும் தெரிந்துகொண்டனர். இச்சட்டம் இயற்றியதன் மூலம் தங்களை முற்போக்கு சிந்தனைவாதிகளாக காட்டிக் கொண்டவர்களின் முகத்திரை கிழிந்துள்ளது.

ஒருவேளை இந்து மதத்தில் இப்படி ஒரு முத்தலாக் என்னும் வாய்மொழி விவாகரத்து முறை இருந்து அதற்கு தடைவிதித்து, சட்டம் இயற்றியிருந்தால் நிச்சயமாக காங்கிரஸ், இடதுசாரிகள், பெண்கள் அமைப்பினர் வரவேற்றிருப்பார்கள்" என விமர்சித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details