பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த சோன்பத்ரா கலவரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய வன்கொடுமைகளை விவாதிக்க திரிணாமூல் கோரிக்கை!
டெல்லி: பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை சட்டம் 267-யின் கீழ் நடக்கும் நடைமுறைகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான 800 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.