லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். டெல்லி காவல் துறையைச் சேர்ந்த ஐவர், மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த பெண், பத்திரிகையாளர் என மொத்தம் 13 பேர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்தனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.